அரசியலில் குதித்த விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி!

கமலஹாசனை அடுத்து தற்போது விஷாலும் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பிரவேசத்தில் இறங்கி உள்ளார்.

மேலும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளார், இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, வரும் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.