“அருவி” படத்தில் நடிக்க மறுத்த அந்த மூன்று முன்னணி நடிகைகள் இவங்க தான்

அருவி திரைப்படம் இந்த வருடம் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டுதல்களையும் பெற்ற திரைப்படம் என்று கூறலாம். படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் மறுப்பு தெரிவித்தார்கள் என்று கூறியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர்.

ஆனால், தற்போது யார் யார் படத்தில் நடிக்க மறுத்தது என தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர்கள் தான் இந்த படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள். இவர்கள் முடியாது என்று மறுத்த பின்னர்தான் கிட்டதட்ட 500 பேரை ஆடிஷன் செய்து அதிதி பாலனை தேர்ந்தெடுத்தோம் என கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் அருண்.