டி.வி. தொகுப்பாளராகும் சன்னி லியோன்

இந்தி பட உலகின் முன்னணி நடிகை சன்னிலியோன். கடைசியாக இவர் நடித்த படம் ‘டெரா இன்டெசார்’. இந்த படம் வெற்றி பெறவில்லை. தற்போது கடை திறப்பு விழா, சினிமா நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து வருகிறார்.

புத்தாண்டை யொட்டி, பெங்களூரில் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சன்னி லியோன் டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிறார். டிஸ்கவரி டி.வி.சேனல் நடத்தும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற புகழ் பெற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்தியில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி ஜீத் சேனலில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

டி.வி.தொகுப்பாளர் ஆனது குறித்து கூறிய சன்னிலியோன்…

“டிஸ்கவரி ஜீத் சேனலில் பிரபல டி.வி. நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்னை இன்னும் பிரபலப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களையும் பார்க்க வைக்க முடியும்” என்றார்.