`சத்யா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ள படம் `சத்யா’.

‘சைத்தான்’ பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா, ஆத்மா பேட்ரிக், சித்தார்த் சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Sathya from December 8

கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிமோன் கே.கிங் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

Sathya from December 8

சமீபத்தில் வெளியான `சத்யா’ படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.