அருள்நிதியுடன் பிக்பாஸ் பிரபலம்

News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலர், தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்கள். அப்படி, அதில் கலந்துக் கொண்ட பிந்து மாதவி தற்போது அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அருள்நிதி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் கரு பழனியப்பன். அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது, “எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் ‘புகழேந்தி எனும் நான்’. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும். டிசம்பரில் தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

No Comments

Leave a Reply

Your email address will not be published.

News
AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் – ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்!

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. படத்தின் தோல்விக்கு முழுக்க முழுக்க சிம்பு தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார் தயாரிப்பாளர்.இதனையடுத்து தற்போது படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சிம்புவை பற்றி பேசியுள்ளார். படத்தை நான் துபாயில் தொடங்கி காசியில் முடிக்க திட்டமிட்டு …

News
அரசியலில் குதித்த விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி!

கமலஹாசனை அடுத்து தற்போது விஷாலும் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பிரவேசத்தில் இறங்கி உள்ளார். மேலும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளார், இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, வரும் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் …

News
உலகளவில் வசூலில் பாகுபலி 2 எத்தனையாவது இடம் தெரியுமா?

ராஜமௌளி இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியடைந்த படம் பாகுபலி 2. இந்த படத்தில் பிரபாஸ் அனுஷ்கா ராணா சத்யராஜ் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் இந்தியாவில் மட்டும் 1000 கோடிக்கு சேர் வந்த படமாகும். இந்நிலையில் உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் பாகுபலி2 49 இடத்தில் உள்ளதாம். முதல் மூன்று இடங்களில் ஹாலிவுட்டில் வெளிவந்த Beauty and the Beast படமும் The Fate of …