“அனிருதிற்கும், எனக்கும் எப்படி ஒர்க்அவுட் ஆகிறது” – ரகசியம் உடைத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவா-மோகன்ராஜா முதன் முறையாக கூட்டணி அமைத்து அமைத்து உருவாகியுள்ள திரைப்படம் வேலைக்காரன். தனிஒருவன் படத்தை பார்த்த பிறகு மோகன்ராஜா சார் படத்தில் நடிக்கவேண்டும் என்று அவரிடம் நானே சென்று உங்களுடன் ஒரு படம் பண்ணனும் சார் என்று கூறினேன். எனக்காக கதை இல்லாமல், கதைக்காக நான் இருக்கவேண்டும் என்று கூறினேன். அதனை மேகன்ராஜா சார் சரியா பண்ணிட்டார்.

எனக்கும், அணிருதிற்கும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். நாங்க லவ்வர்ஸ் கிடையாது, அண்ணன் தம்பி மாதிரி. அவருடைய வேலைகளில் நான் தலையிட மாட்டேன். எனக்காக இசையமைக்கும் போது நான் அவருடன் இருக்க மாட்டேன். இப்படி வேணும், அப்படி வேணும் என்று எந்த ஒரு டிமான்டும் வைக்கக் மாட்டேன். அவரு என்ன மியூசிக் போட்டு குடுக்குறாறோ அது தான். அவ்வளவு தான். இது தான் எனக்கும் அனிருதிற்கும் ஒர்கவுட் ஆகுறதுக்கு காரணமா இருக்கலாம். என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.