புலிமுருகன் படத்தின் 2 பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!

இந்த ஆண்டு ஆஸ்கருக்காக தேர்வு செய்யப்பட்ட 70 பாடல்களின் லிஸ்டை அகடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘புலிமுருகன் ‘ படத்தில் இடப்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஆஸ்கார் விருது பட்டியலில் தேர்வாகியுள்ளன. வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘புலிமுருகன்’ திரைப்படம் வெளியானது.

பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் மலையாளத்தில் அதிக வசூலான படம் என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் 90-வது ஆஸ்கர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது. காடனயும் கால்சிலம்பே , மானத்தே மரிகுரும்பே இரண்டு பாடல்கள் இடப்பெற்றுள்ளன. புலி முருகன் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இதே போல ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இசைமைத்த லேக் ஆஃப் ஃபயர் படத்தில் ஹேவ் யு எவர் வொண்டர்ட், ஐ வில் பி கான், வி வில் பார்டி ஆள் நைட் என மூன்று பாடல்கள் இடம் பிடித்துள்ளன. இறுதிப் பட்டியல், 2018 ஜனவரி மாதம் 23-ம் தேதி வெளியிடப்படும். 2018 மார்ச் 4-ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ள 90-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.