சூர்யா-வின் அடுத்த படத்தின் கதாநாயகி இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிக்கை

நடிகர் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சூர்யா, செல்வராகவன் இணையும் அடுத்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாக கூறியிருந்தார்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அதன் படி சற்று முன்பு வந்த அறிவிப்பின் படி நடிகை சாய்பல்லவி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் படம் உருவாகவுள்ளதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே, சூர்யா36 படத்தின் ஹீரோயின் சாய்பபல்லவி தான் என்று தகவல் தீயாக பரவியது, இதனை நம் தளத்திலேயே கூறியிருந்தோம். இந்நிலையில், சற்று முன்பு சாய்பல்லவி சூர்யா36 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.